Categories
மாநில செய்திகள்

மூன்று உயிர்களை பறித்த செல்பி மோகம்….  பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ், ஹரீஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய நான்கு பேர் இன்று பழனி கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் பழனி அருகே உள்ள வரதமாநதி அணைக்கு சென்று, அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் செல்பி எடுத்துள்ளனர். அதில் மூன்று பேர் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் நீரில் தேடியபோது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ்  மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கணேஷ் மூவரும் உயிரிழக்க ஹரிஷ் மட்டும் உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களில் விக்னேஷ் யோகேஷ் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக உயிர்தப்பின ஹரிஷ் என்பவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |