மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் குழந்தையின் முகத்தில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் குழந்தையின் உடல் உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் பாட்டியான நாகம்மா மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையின் மூக்கை அழுத்திப்பிடித்து இரக்கமில்லாமல் கொலை செய்து உள்ளார் .இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர்களுக்கும் சம்மந்தம் இருக்குமா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.