சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை பிடித்து தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,191 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, வீட்டு தனிமைகளில் 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 75 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.