மூத்த குடிமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கை வரைவு குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் வசித்து வரும் மூத்த குடிமக்களின் நலன் கருதி கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை வரைவானது 10 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குனர் த.ரத்னா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி நிர்மலா சென்னை மருத்துவ கல்லூரி முதியோர் நல பிரிவு தலைவர் சாந்தி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவால் இந்த கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் மார்ச் 5 ஆம் தேதிக்குள் தமிழக அரசின் இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்.” என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.