ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தென்னந்தோப்பிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தனியாக இருந்ததை காளிமுத்தம்மாள் பார்த்து விட்ட நிலையில் இதுபோன்ற செயல் இனிமேல் நடக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் அங்கிருந்த பம்புசெட் அறையில் வைத்து அந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரது 6 பவுன் வளையல் மற்றும் 6 பவுன் தண்டட்டி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் மகனான சண்முகம் பம்புசெட் அறையில் வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
மேலும் அவரது கைகளில் காதுகளில் அணிந்திருந்த நகைகள் திருட்டு போயிருந்த நிலையில் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த பரமக்குடி காவல்துறை சூப்பிரண்டு அதிகாரியான வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலையாளியான வடிவேல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த முத்துராக்குவையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பரமகுடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதேவி ஆகியோர் வடிவேல் மற்றும் முத்து ராக்கு மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.