Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூட்டை மூட்டையாக குடோனில் இருந்த அயோடின் கலக்காத உப்பு”…. உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரிகள் பறிமுதல்…!!!!

அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான உப்பு மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, அயோடின் கலந்த உப்பை தான் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் கைப்பற்றபட்ட உப்பில் அயோடின் கலக்கப்படவில்லை. மேலும் மூட்டைகளில் லேபிள் ஒட்டவில்லை. இது தொழிற்சாலை தேவைக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனால், இந்த உப்பு எதற்காக உணவு தானிய அங்காடியில் கொண்டுவரப்பட்டது என விசாரணை நடத்தி வருவதாகவும் குடோனின் சொந்தக்காரர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இரண்டு இடங்களில் சோதனை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |