Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூட்டு வலியை குணப்படுத்த… லச்ச கொட்டை கீரை பொரியல் ரெசிபி…!!!

லச்ச கொட்டை கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

லச்ச கொட்ட கீரை                               – 100 கிராம்
பாசிப் பருப்பு                                           – 20 கிராம்
சீரகம்                                                           – 3 ஸ்பூன்
தேங்காய் துருவல்                                 – விருப்பத்திற்கேற்ப
உப்பு                                                             – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

நல்ல எண்ணெய்                                 – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம்                            – ஒரு கைப்பிடி
உளுந்தம் பருப்பு                                  – 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல்                                  – 3
கடுகு                                                          – சிறிதளவு
கறிவேப்பிலை                                      – சிறிதளவு

செய்முறை:

முதலில் லச்ச கொட்ட கீரையை நன்கு அலசி நடுநரம்பினையும், காம்பினையும் நீக்கி, பின்னர் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் சின்ன வெங்காயத்தை சதுரத் துண்டுகளாக வெட்டியும், மிளகாய் வற்றலை காம்பை நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி, அதில் அலசிய பாசிப் பருப்பை போட்டு மூடி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, மிளகாய் வற்றல், சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்தப்பின், அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம் சற்று வதங்கியதும், அதில் நறுக்கிய லட்ச கொட்ட கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருசேர கிளறி, மூடி போட்டு, மிதமான தீயில் வேக விடவும். கீரை வெந்ததும் பாசிப் பருப்பின் நீரை வடித்தப்பின், பாசிப் பருப்பை கீரையுடன் சேர்த்துக் கிளறி, ஒருநிமிடம் கழித்து அடுப்பினை அணைக்கவும்.

இறுதியில் தேங்காய் துருவலை கீரையுடன் சேர்த்து ஒருசேரக் கிளறினால் சுவையான லச்ச கொட்டை கீரை பொரியல்  தயார்.

Categories

Tech |