ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ராஞ்சியில் பிரசா முண்டா நினைவாக அருங்காட்சியகத்தினைகாணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடியினர் சமூக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பழங்குடியின மக்களின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் வெளியில் சொல்லவில்லை. அவர்கள் அனைத்தையும் மூடி மறைத்து விட்டார்கள். நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதம் இருந்தும் பழங்குடிகளின் கலாச்சாரமும், திறமையுடன் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவர்களை கட்சிகள் தன்கலிமன் சுயலாபத்துக்காக பயன்படுத்தினார்கள். ஆனால் இனி எல்லாம் மாறும் என்று தெரிவித்துள்ளார்.