ஆப்கான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் முடப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஆசிரியர்களும் மாணவிகளும் பேரணியாக சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் தலிபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். இதனை கண்டித்து மாணவிகளும் ஆசிரியர்களும் பேரணியாக சென்றுள்ளனர். மேலும் அங்கு 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை மட்டுமே பள்ளிக்கு செல்ல அனுமதித்த தலிபான்களை கண்டித்து உலக அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இதனை அடுத்து பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு செல்லலாம் என்று அறிவித்த தலீபான்கள் தற்போது வகுப்புகள் ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அதனை முட உத்தரவிட்டனர். மேலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தோஹவில் நடைபெற இருந்த ஆப்கான் பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகளை குறித்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ரத்து செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.