Categories
தேசிய செய்திகள்

மூடநம்பிக்கையின் உச்சம்…. கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில், பிஹ்வண்டி என்ற பகுதியில் இப்ரான் ஷேக் குரேஷா ஷேக் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும் இப்ரானை அவரது மனைவி அவ்வப்போது அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவிக்கு பேய் பிடித்துள்தாகவும், அதனால் தான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் நினைத்துள்ளார். மேலும் யாரோ ஒருவன் தன் மனைவி மீது பேயை ஏவி விட்டதால்தான் அவர் தன்னை தாக்குவதாக இப்ரான் மூடநம்பிக்கையை நம்பியுள்ளார்.

இந்த நிலையில் இப்ரான் மதுபோதையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி குரேஷா கணவரிடம் சண்டையிட்டு உள்ளார். மேலும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது மனைவி உடலில் உள்ள பேய்தான் தன்னுடன் சண்டையிடுவதாகவும், அந்தப் பேயால்தான் மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக நினைத்த இப்ரான், கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குரேஷியை குத்தினார்.

இதனால் குரேஷா இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த குரேஷாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்கு முன்னரே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் இப்ரான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இப்ரானை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் குரேஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |