Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுப்பிடிப்பா…? இதை செய்யுங்க….. நொடியில் நிவாரணம் பெறலாம்…!!

சிறுவயதில் விளையாட்டு மைதானத்தில் அதிகப்படியாக ஓடியாடி விளையாடும்போது  நம்மில் பலர் மூச்சுப்பிடிப்பால் சிரமப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் அதிகப்படியாக ஓடி, ஆடி விளையாடுவது கூட இல்லை. சிறிது தூரம் வேகமாக நடந்து சென்றாலே, பலருக்கு மூச்சுபிடிப்பு என்பது ஏற்பட்டு விடுகிறது.

மேலும் பெரும்பாலானோருக்கு முட்டை உள்ளிட்ட ஒரு சில உணவுகளால் வாயு பிரச்சனை மூலமாகவும், மூச்சுப்பிடிப்பு ஏற்படும். மூச்சு பிடிப்பினால் சிரமப்படுபவர்கள் வீட்டிலுள்ள சூடம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து மீண்டும் நன்றாக சூடாக்க வேண்டும். சூடுபடுத்திய பின், அதை பதமாக எடுத்து சிறிது ஆறியதும் அப்படியே மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் தடவிவர உடனடியாக குணம் பெறலாம். 

Categories

Tech |