Categories
உலக செய்திகள்

மூக்கின் மேல் விரலை வைத்த உலக நாடுகள்…. வியக்க வைத்த சீனாவின் புதிய சாதனை….!!!!

உலகநாடுகளின் வல்லரசுப் போட்டியில் முழுவீச்சில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு நாடு சீனா. தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக மின்னல் வேகத்தில் பறக்கக்கூடிய ரயிலை சோதனை செய்து கெத்து காட்டு இருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் இரண்டு தனித்தனி பாதையில் நேருக்கு நேராக ஓடு பாதையில் மணிக்கு 870 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்ல வைத்து காண்போரை திகைப்படைய வைத்த உலக சாதனை படைத்துள்ளது சீனா.

இந்த இரண்டு சோதனை ரயில்களும் கடந்த மாதம் ஹெனானில் உள்ள திறந்த ரயில் பாதை பிரிவில் ஒன்றை ஒன்று கடந்து சென்றன. இரண்டு ரயில்களும் முறையை 435 கிலோமீட்டர் முழுமையான வேகத்தில் இயங்கி ஒன்றை ஒன்று கடந்து சென்றது. இரண்டு ரயில்களும் முழுமையாக கடந்துசெல்ல எடுத்துக்கொண்ட நேரம் 0.86 வினாடிகள் மட்டுமே. அப்படி ஒரு படு வேகத்தில் இரண்டு ரயில்களும் கடந்து சென்றன.

இது சீனாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற ரயில்களை வேகமாக இயக்கி பல சாதனைகளைப் படைத்து,அந்த சாதனைகளை மீண்டும் சீனாவில் முறியடித்து வருகிறது. தற்போது கூட கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தான் ஹெனானின் ஜென்ஜோங் நகரம் தென்மேற்கு சீனாவின் சொங்கிங் வழியாக ஓடும் இரு ரயில்கள் மணிக்கு 806 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு சுரங்க பாதையில் ஒன்றை ஒன்று கடந்து சென்று உலக சாதனை படைத்தன. அந்த சாதனையை இப்போது சீனா முறியடித்துள்ளது.

Categories

Tech |