Categories
உலக செய்திகள்

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடையா..? மறைமுக திட்டம்.. மக்களிடம் கருத்துக்கணிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடை விதிப்பதற்கான கருத்து கணிப்பு நடந்துள்ளது.  

ஐரோப்பிய நாடுகள் சில இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தாவிற்கு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்தில், மக்கள் தங்கள் முகத்தினை முழுமையாக மறைக்கும் வகையிலான உடைகளை பொது இடங்களில் அணிய தடை விதிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இத்தடை இஸ்லாம் மக்கள் அணிந்து வரும் பர்தா உடையை நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் சில பர்தாவிற்கு தடை விதித்திருப்பதால், இதனை சுவிட்சர்லாந்திலும் மேற்கொள்வதற்கான நோக்கத்திற்காக தான் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பிற்காக கடந்த ஒரு வருடமாக விவாதங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது முகம் முழுவதையும் மறைக்கக் கூடிய வகையில் உடைகள் அணிய தடை செய்யப்படலாமா? என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிற்கு பெருமளவில் எதிர்ப்பு தான் கிடைத்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசும் இந்த தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து சட்டம் இயற்றப்படுவதற்கான கருத்துக்கணிப்பு நடந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்த தடை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இதற்காக விலக்குகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சுவிற்சர்லாந்தில் மொத்த மக்கள் தொகையில் 5.5%தான் இஸ்லாமியர்கள். ஆனாலும் இஸ்லாம் பெண்கள் பலரும் இத்தடைக்கு எதிர்ப்பு தான் தெரிவிக்கின்றனர். எனினும் சில மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |