இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம் கோயில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம். இவருக்கு சிறு வயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் பல ஓவியங்களை தனது வாழ்நாளில் வரைந்துள்ளார். அதிலும் கிருஷ்ணர் படங்களை வரைவதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்துள்ளார்.
ஆனால் இவர் வரைந்த கிருஷ்ணர் படம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியிலுள்ள கிருஷ்ணசுவாமி கோவில் நிர்வாகத்தினர் இவர் வரைந்து வைத்திருக்கும் கிருஷ்ணர் படத்தை வாங்கி கோயிலில் வைத்து வணங்க இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கிருஷ்ணர் படத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.