நிவர் புயல் காரணமாக பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் கன மழை பெய்துள்ள நிலையில் இதே நிலை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகி வரும் நிவர் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என்பதால் செம்பரம்பாக்கம் பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ஜெல் சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.