தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சென்னைவாசிகள் மெட்ரோ ஸ்டார் என்ற அமைப்பின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவை செய்து வருகிறார்கள். சென்னை நகரில் மூன்று வேளைக்கும் சேர்த்து சுமார் 1700 உணவு பொட்டலங்களை தினமும் வழங்கி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டியும் மக்கள் தாமாக முன்வந்து நிதி உதவி அளித்து வருகின்றனர்.