முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிஎப்ஐ அமைப்பினர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்னும் இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமலாக்கத்துறை கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு கேரளா உட்பட நாடு முழுவதும் 11 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் சர்ச்சை கூறிய ஆவணங்கள், செல்போன், லேப்டாப்புகள், பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சோதனையின் முடிவில் நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 22 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் இதற்கு இடையே நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் கடந்த 23ஆம் தேதி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சி தாக்குதல், கல்வீசித்தாக்குதல் போன்றவை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் 23ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்திய நிலையில் போராட்டவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் கண்ணபுரம், மத்தனூர், இரிட்டி, பப்பிசிசேரி, வாழப்பட்டணம் போன்ற பகுதிகளில் பிஎப் ஐ நிர்வாகிகளின் வீடுகள் கடைகள் வணிக வளாகங்களில் நேற்று மாலை போலீஸர் அதிரடி சோதனை மேல் கொண்டுள்ளனர். மேலும் இந்த சோதனையின் போது லேப்டாப், வங்கி கணக்கு விவரங்கள், செல்போன்கள் போன்றவற்றை கைது செய்துள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.