நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த 100 நாட்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையை யாரும் அலட்சியமாக கருதக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. மக்களின் பொறுப்பற்ற செயல்களால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 73 மாவட்டங்களில் தினமும் கொரோனா பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது.
ஆனால் 47 மாவட்டங்களில் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க அடுத்த 100 நாட்களில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும். இதனால் கூட்டங்கள், மூடிய அரங்குகளில் நிகழ்வுகள் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது.கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவும் அபாயம் ஆக மாறிவிடும் என்று அரசு எச்சரித்துள்ளது.