செய்தியாளர்களிடம் பேசிய கேபி. முனுசாமி, மரியாதைக்குரிய அண்ணன் ஒபிஸ் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் அவர்கள் என்ன ஊடகங்களுக்கு கருத்து சொன்னார் என்பது தெரியவில்லை. நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். திருமதி சசிகலா அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துகொள்வதை பற்றி தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று அவர் சொன்னதாக நீங்கள் என்னிடத்திலே கேட்குறீர்கள். ஒரு தெளிவான முடிவு அனைத்து இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஏற்கனவே எடுத்து விட்டது.
தலைமை கழகத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி திருமதி சசிகலா அவர்களை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று தீர்மானமே போட்டகி விட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கழக நிர்வாகமும் அவர்களாகவே முன்வந்து தலைமை கழகத்திற்கு தீர்மானம் போட்டு அனுப்பி விட்டார்கள். அதில் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வதை பற்றிய கேள்வியே எழவில்லை.
அப்படி எழாத கேள்விக்கு அநேகமாக மீண்டும் அது வைத்த முற்றுப்புள்ளிக்கு நீங்கள் கமா போட்டு நீட்டிகுறீர்கள் என்று தான் கருதுகிறேன். அது முடிந்த ஒன்று. அதோடு மட்டுமல்ல, திருமதி சசிகலாவை பற்றி ஆதரவாக பேசிய அதிமுகவின் பல நிர்வாகிகள் கட்சி கட்டுக்கோப்போடு இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதிலே அப்படி வெளியேற்றப்படுகின்ற அந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்து போட்டு தான் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தினுடைய நடைமுறை என்பது ஒரு முன்னெடுத்து வைத்தல் அதை தொடர்ந்து நடத்திக்கொண்டே செல்லவேண்டும். அது தான் இயக்கம்.
அதுபோல் தான் அதை தொடர்ந்து தான் இந்த இயக்கம் நடைபெறும். எந்த சூழ்நிலையிலும் திருமதி சசிகலா அவர்களை….. ஒரு கட்சி தீர்மானம் போட்டு தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து தொண்டர்களும் ஏகமனதாக போட்ட ஒரு நிகழ்ச்சியை அனேகமாக ஊடங்கங்கள் தயவு செய்து நீங்கள் அதற்கு கமா கொடுக்காதீர்கள் என்று கேட்டுகொள்கிறேன் என வேண்டுகோள்விடுத்தார்.