அமெரிக்காவில் 8 வயது சிறுமி ஒருவர் பளிங்கு கைப்பிடி சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று இரவு எட்டு மணி அளவில் நியூயார்க் நகரின் வெஸ்ட்செஸ்டர் சதுக்கம் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடியிருப்பு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பளிங்கு கைப்பிடி ஒன்றை இருவர் லேசாக நகர்த்தியுள்ளனர். அதில் தவறி சரிந்து விழுந்த அந்த பளிங்கு கைப்பிடி 8 வயது சிறுமி தலையின் மீது வேகமாக விழுந்துள்ளது.
இதையடுத்து அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் ஓடி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த சிறுமி பளிங்கு கைப்பிடி சரிந்து விழுந்ததில் தலை சிதைந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.