திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பார்வை-1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் பற்றி 1983ம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் கூட்டம் பிரிவு 82 கீழ் ஆய்வுக்கு ஆணையிடபட்டிருக்கிறது.
பார்வை-2ல் கண்டுள்ள கடிதம் வாயிலாக கே.924 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் ஆய்விற்கு தேவையான ஆவணங்கள் கோப்புகள் மற்றும் தீர்மான புத்தகத்தினை தர மறுப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பாடசாலையின் ஆவணங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பண்டகசாலையின் தலைவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் பட்சத்தில் ஆய்வுப் பணிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால், பார்டகசாலையின் தலைவரை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், பிரிவு 76-Aன் கீழ் தற்காலிக பதவி நீக்கம் செய்யுமாறும் அறிக்கை பெறப்பட்டிருக்கிறது.
எனவே, பாஸ்டகசாலையில் தவறான நிர்வாகம் (Gross Mismanagement) மேற்கொண்டு பொது மக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பண்டகசாலையின் மீறு இருக்கும் நம்பிக்கை குலையும் வகையில் (Breach of trust) செயல்பட்டதற்காக, பண்டகசாலையின் தலைவர் திரு.அ.கருணாகரன், என்பவரை பண்டகசாலையின் நலன் மற்றும் பொது நலன் கருதி 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், பிரிவு 76-A(1)ன்கீழ் தற்காலிக பதவி நீக்கம் செய்து ஆணையிடப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.