Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுப்பான… இனிப்பு சீடை ரெசிபி…!!!

பச்சரிசி                                               – 1 1/2 கப்
தேங்காய் துருவியது                    – 1/2 கப்
கருப்பு வெல்லம்                             – 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப்
எண்ணெய்                                        – வறுக்க
நெய்                                                      – 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சரிசியை 2 முதல் மூன்று மணி நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தண்ணீரை நன்கு வடித்து, உலர வைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவு பதத்தில் அரைக்கவும்.

பின் அரைத்த மாவை ஜல்லடையில் போட்டு ஜலித்து எடுக்கவும். அதனை தொடர்ந்து வெல்லத்தை கடாயில் போட்டு, அதனுடன் 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிடாமல் இறக்கி விடவும்.

அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்து மாவில் கலந்து, உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறி, அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும். அதன்பின், ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.

பின் சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில், சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன்தினமே மாவை நன்கு பிசைந்து வைத்து, மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பிசைந்த மாவை சிறிய அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்துஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருண்டைகளை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பின் பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம், ஏனென்றால் உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். ஆதலால் வறுக்கும்போது சில சமயத்தில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாள வேண்டும். இப்போது சூப்பரான இனிப்பு சீடை ரெடி.

Categories

Tech |