காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் மரம் முறிந்து 2 வீடுகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி டம்ளர்முடுக்கு பகுதியில் இருக்கும் மரம் முறிந்து இரண்டு வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரையத்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.