திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
Categories
“முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா” அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்த பக்தர்கள்….!!!
