தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு வேறு ஒருவரால் நல்ல ஓட்டாக செலுத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ளவாக்காக வேறு ஒரு நபரால் போடப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?” என அவர் கேட்டுள்ளார்.
மேலும் அரசு எந்திரங்களை எந்த அளவிற்கு தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். சில இடங்களில் திமுகவினருக்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு கோயம்புத்தூரில் வாக்குச்சாவடி மையத்தின் வாசலில் வைத்து பண விநியோகம் நடைபெற்றதாகவும் அவர்களை திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.