Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகதாஸ்சுக்கு பாதுகாப்பு – போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு …!!

இயக்குனர் AR முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்   நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தர்பார். AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகின்றது. இதையடுத்து பட வினியோகஸ்தர்கள் எங்களுக்கு ரஜினி , முருகதாஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநியோகஸ்தர்களும் நடிகர் ரஜினி , இயக்குனர் முருகதாஸ்சை தங்களால் சந்திக்க முடியவில்லை என்று தொடர்ந்து சொல்லிவந்த நிலையில் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகவும் ,  தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து விருகப்பக்கம் , தேனாம்பேட்டை காவல்நிலையம் அறிக்கை அளிக்க கோரி வழக்கை பிப் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |