முரட்டுக்காளை படத்தில் முதலில் வில்லனாக விஜயகாந்த் நடிக்க இருந்தாராம் . ஆனால் திடீரென்று வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம்.
1980-இல் வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் இயக்கப்பட்டது மற்றும் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் எழுத்தப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ரதி அக்ரிஹோத்ரி மற்றும் சுமலதா ஆகிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். முரட்டுக்காளை ரஜினிகாந்துக்கு ஏ. வி. எம் தயாரிப்பில் முதல் படம். மேலும் இப்படத்தின் மூலமாக தான் ஏ. வி. எம் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீண்ட ஓய்விற்க்கு பிறகு மீண்டும் நுழைந்தது. இப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி 1980-இல் வெளியானது. மேலும் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும், இப்படம் ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார், அதிரடி நாயகன் என்று இரு வகையாக காட்டியது.
முரட்டுக்காளை படத்தின் கதையை கேட்ட நடிகர் விஜயகாந்த் தான் முதன்முதலில் வில்லனாக இப்படத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால் திடீரென்று வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம்.