பாஜக விற்கு எதிரான அணியை அமைப்பதற்காக அச்சாரமாக டெல்லி திமுக அலுவலக திறப்பு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்படியான சம்பவம் நடைபெற வில்லை என்றாலும் திறப்பு விழாவை வைபவம் டெல்லியில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக முதல்வர் தரப்பு நினைக்கிறது என்றார்கள். டெல்லி அலுவலக கட்டுமானம் மற்றும் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில்தான் நடைபெற்றிருந்தது.
துபாய் பயணத்தில் சபரீசன் முதல்வர் உடனேயே இருந்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டால் மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் சபரீசன் அதில் கலந்து கொள்ளவில்லை என கூறுகிறார்கள். டெல்லியில் பிரம்மாண்டமான அலுவலகம் கட்டப்பட்ட நிலையில் திமுகவின் பார்வை மும்பை பக்கம் திரும்பியுள்ளதாக சொல்கின்றார்கள். நாட்டின் தலைநகர் டெல்லி ஆக இருந்தாலும் மும்பை தான் வர்த்தக தலைநகரமாக பார்க்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் குவிந்து கிடக்கும் மும்பையில் திமுகவிற்கு பிரம்மாண்டமான அலுவலகம் கட்ட வேண்டும் என யோசனை உருவாக இருக்கிறதாம். அப்படி அமையும்போது முதலீட்டாளர்களை இயக்கலாம் என நினைக்கிறார்களாம். இதற்கான பணியை சபரீசன் மேற்கொள்வதாக கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறது.
சென்னை, கோவை, துபாய் என பல்வேறு நகரங்களில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக மும்பையிலும் கால்பதிக்க முதற்கட்டமாக அங்கு அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கலாம் என திட்டமிட்டு ஆரம்ப பணிகள் தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் செல்வாக்குமிக்க உடன் பிறப்புகள்.