எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கியாஸ் விலையில் மாற்றம் செய்யாமல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது.
புது டெல்லி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையினை மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இதனிடையில், இந்த மாதத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயித்ததில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் இதன் விலையை மாற்றி நிர்ணயிக்கவில்லை. இதனையடுத்து, சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை தற்போதைய மாதமான, நவம்பர் மாதத்திலும் 610 ரூபாயாக நீடித்துள்ளது.
மேலும் பெருநகரங்களான டெல்லி மற்றும் மும்பையிலும் இதன் விலை 594 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 620.50 ரூபாயாகவும் நீடித்து உள்ளது. ஆனால், கடைகள் மற்றும் பெரிய ஹோட்டல்கள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, 19 கிலோ எடை சிலிண்டர் ஒன்றுக்கு 78 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் 1,354 ரூபாயாகவும், டெல்லியில் 1,241.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,296 ரூபாயாகவும், மும்பையில் 1,189.50 ரூபாயாகவும் இதன் விலை உயர்ந்துள்ளது.