Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்பதிவு பெட்டியில் அத்து மீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து செல்லக்கூடிய விரைவு ரயிலில் பெரம்பூரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அசாம் செல்லும் விரைவு ரயிலில் ஏறி உள்ளனர்.

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமிழக மாணவர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி ஏறி இருக்கையை ஆக்கிரமித்தனர். இதனை கண்டு தமிழக மாணவர்கள்  அதிர்ச்சி அடைந்த  தமிழக மாணவர்கள் வடமாநிலவரிடம் இருக்கையை தரக் கூறி  கேட்டபோது அவர்கள் தர மறுத்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அதன்பின் போலீசார் வட மாநிலத்தவர்களை கண்டித்து அவர்களை கீழே இறக்கிவிட்டு அந்த இருக்கையில் தமிழக மாணவ, மாணவியர்களை அமர வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |