பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை- பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கு இணைப்பு ரயிலாக பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்தனர். இதற்கு பயணிகள் கூட்டத்தினர் போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.
இதனால் பொள்ளாச்சி- திருச்செந்தூர் இடையிலான ரயில் சேவை தொடங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஒரு நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் சாதாரண ஏழை – எளிய மக்கள் முன்பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் எனவும் அதன் மூலம் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.