Categories
தேசிய செய்திகள்

முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுப்பது இனி ரொம்ப ஈஸி…. ரயில்வே நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு….!!!

செல்போன் மூலமாக வங்கி பணம் பரிமாற்றம் மற்றும் முன்பதிவு ரயில் டிக்கெட் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் தற்போது எளிதாக நடைபெறுகிறது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலமாக எளிதில் பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.  செல்போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன்பு காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்ய முடியும் .

இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால நேர விரயத்தை பயணிகள் தவிர்க்கலாம் .அதற்கு முதலில் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்ட், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை செல்போனில் பதிவு செய்த பிறகு நாம் பயணச்சீட்டு பதிவு செய்ய தயாராகி விடுகிறோம். ரயில் புறப்படும் இடத்தை தேர்ந்தெடுக்கும் போது அதுவாகவே நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மூன்று ரயில் நிலையங்களை தெரிவுசெய்யும்.

அதில் உங்களுக்கு தேவையான ரயில் நிலையத்தைத் தேர்வு செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் செல்லவேண்டிய வழியையும் அதில் தேர்வு செய்து கொள்ள முடியும். அதன் பிறகு திரையில் தோன்றும் கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு  ஆகியவற்றின் மூலமாக நீங்கள் செலுத்தலாம். பிறகு பயணச்சீட்டு பதிவாகிவிடும். ரயில் பயணச்சீட்டு கேட்கும்போது இந்த செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை நீங்கள் காண்பித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி விரைவான, எளிதான சேவையை பயணிகள் பெறுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

Categories

Tech |