Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்பகையால் நடந்த விபரீதம்…. சுமைதூக்கும் தொழிலாளி அடித்து கொலை…. தந்தை-மகன்கள் கைது….!!

முன்பகை காரணமாக நடந்த தாக்குதலில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் கேசவன் என்ற சக்திவேல்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தம்பி சுதாகருடன் இணைந்து காந்தி மார்க்கெட்டில் சுமை துக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது மகன்கள் வெற்றிதாசன், கண்ணதாசன் ஆகியோர் திடீரென அங்கு சென்று சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது தம்பி சுகாதர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயபால், வெற்றிதாசன் மற்றும் கண்ணதாசன் ஆகிய 3 பேரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக சக்திவேலை தாக்கியது தெரியவந்துள்ளது.

Categories

Tech |