Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர் டவுல் கேலி… உங்களுக்கு இது தேவையில்லாத பேச்சு… பதிலடி கொடுத்த டேல் ஸ்டெயின்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் டேல் ஸ்டெய்னை கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று டேல் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அப்போது அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் ஸ்டாய்னின் முடி அமைப்பை பற்றி மனம் புண்படும்படி கேலி செய்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

டேல் ஸ்டெய்னின் தலைமுடி போன்றே அவரின் வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக  இருக்கும் என சைமன் டவுல் கூறினார். அதற்கு சைமன் டவுலுடன் இருந்த வர்ணனையாளர் கோவர் இது குவாரண்டைன் ஹேர் ஸ்டைல் என விமர்சித்துள்ளார். இது குறித்து டேல் ஸ்டெய்ன்  தனது ட்விட்டர் பக்கத்தில் சைமன் டவுல் மற்றும் கோவர் ஆகியோரை கண்டித்து கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் வாழ்க்கை பற்றி பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை அது தேவையில்லாத செயலும் கூட என்றும் மற்றவர்களின் எடை, பாலியல், இனப்பின்னணிகள், வாழ்கை முறை ,சிகை அலங்காரங்களை வைத்து அவர்களை காயப்படுத்த வேண்டாம். அது ஒரு மனிதன் செய்யும் செயல் அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |