சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகள் பல்வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மைலப்புரம் மேட்டு தெருவில் பிரான்சிஸ் சேவியர்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பிரான்சிஸ் சேவியர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பிரான்சிஸ் சேவியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.