Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்…. 16 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் சித்தராமையா. இவர் சங்பரிவார் அமைப்பின் வீர் சவார்க்கரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவினர் சித்தராமையாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் குடகு பகுதிக்கு சித்தராமையா சென்றபோதும் அவருக்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பியதோடு, பாஜகவினர் சித்தராமையாவின் காரில் முட்டைகளை வீசினர்.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சம்பவத்தின் காரணமாக ஆளும் கட்சியின் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தற்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா பாஜகவினர் எங்களுக்கு எதிராக காசு கொடுத்து ஆட்களை அனுப்பி வன்முறையில் ஈடுபட சொல்லியதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு பாடம் புகட்டுவோம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |