Categories
மாநில செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…”ஞாபகம் வருதே பாடல் தான் நினைவிற்கு வருகிறது”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்  கூறியதாவது, வெள்ளிகிழமை  இரவு முதலில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 50 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம் பழைய நண்பர்களை பார்க்கின்றேன்.

எனக்கு இந்த பள்ளி வளாகம் மிக மிக மகிழ்ச்சியான ஞாபகமாக இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவேன் எனவோ, ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பேன் எனவோ  அதிலும் குறிப்பாக  மாநிலத்திற்கு முதல்வராக இருப்பேன் எனவோ நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் அது நடந்திருக்கின்றது. நான் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு இந்தப் பள்ளியும் ஒரு காரணம். இதனையடுத்து பள்ளியில் எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்த ஜெயராமன் போன்றோரை பார்க்கும்போது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. இப்போது எனக்கு அதை பாட வேண்டும் என்று ஆசை. ஏனென்றால் உலகிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி கடந்த கால இனிமையான நினைவுகள் தான்.

இது போன்ற நினைவுகள் தான் ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் படித்து வெளியேறிய மாணவர்கள் அந்த பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். இது போன்ற ஒரு முன்னெடுப்பை தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் தொடங்க இருக்கின்றோம். வருகிற திங்கட்கிழமை இதற்கான அமைப்பை தொடங்கி வைக்கிறேன். அனைத்தையும் அரசு மட்டுமே செய்து விட முடியாது. இதனை புரிந்து கொண்டு மக்களும் சேர்ந்தால்தான் பள்ளிகளுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் வெற்றி பெற முடியும் என முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |