முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துவமனைக்கு வேறொரு பரிசோதனைக்காக சென்ற பொழுது எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அவரது மூளையில் இருந்த கட்டி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைத்து இவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.