முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர்.
அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது” என்று தெரிவித்திருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.