புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் என் ஆர் காங்கிரஸ் இல் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் லட்சுமிநாராயணன். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். 2016ல் காங்கிரஸ் கட்சி அமைத்தபோது மந்திரிசபையில் இடம் கொடுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத போதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஒரு நாளுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த மற்ற எம்எல்ஏக்களை போலவே பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரங்கசாமி முன்னிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.