தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் என ஐந்து பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட தற்போது கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.