அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினில் இடம் பெற்று இருக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவிற்கு ஆளும் கட்சி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.