தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், ஒரு நடிகை அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் மீது காவல்துறையினர் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில் மேலும் 2 பிரிவுகளையும் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று நடிகை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.