முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிகிருஷ்ணன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஜெயக்குமாருக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். வேண்டுமானால் போலீசார் சிறையிலே சென்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மீதான கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.