முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரது சொந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்த்துள்ளதாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராம மக்கள் ஆவணங்களுடன் கையெழுத்திட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கையுடன் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.