கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவியல் சட்ட பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்றும் வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக கூடாது என்று தமிழக அரசு தலைப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் என்று தெரிவித்ததுடன் வேலுமணி மீதான இடைக்கால உத்தரவுக்காக விசாரணையே வெள்ளிக்கிழமை தள்ளி வைத்திருந்தது. இதற்கிடையில் ஆட்சேபங்களை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையே செப்டம்பர் 17ஆம் தேதி தள்ளி வைத்துள்ளது.