புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி மற்றும் ஹன்சிகா என்ற மகள் இருக்கிறார்கள். இதில் வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த 21ஆம் தேதி தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்ற வெற்றிச்செல்வன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் வெற்றிச்செல்வன் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெற்றிச்செல்வன் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனிடையில் ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்றதால் வெற்றிச்செல்வன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.