12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த அட்டவணையை கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிடும். ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தனியார் கல்லூரிகள் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.