Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப்போது பருவமழை….. வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கணிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் மழையானது, 15ஆம் தேதி அந்தமானில் பெய்கிறது. அதைத் தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு அந்தமானில் தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கினால் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |