அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அங்கு சென்று அஞ்சலி செலுத்த இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துவருகிறது..
இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.. அதாவது, அக்டோபர் 29ஆம் தேதி இரவு மதுரை புறப்படும் முதல்வர் முக ஸ்டாலின், 30 ஆம் தேதி காலை 9 மணிக்கு பசும்பொன் சென்று அங்கு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துகிறார்..
முன்னதாக இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அக்., 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என பிஜேபி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியாகவில்லை, விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..